ஒரு கோட்டை எப்படி வரைவது என்று பார்க்கலாம்.
முதலில் செங்குத்தாக அடிமட்டத்தில் ஒரு கோடு வரையுங்கள். அந்த கோட்டின் பக்கவாட்டில் வலதுபுறம் கடைசி முனையில் இருந்து ஒரு கோடு அதன் பின் கொஞ்ச இடைவெளி விட்டு மற்றொரு கோடு வரைக. இதே போன்று அதன் இடது புறத்தில் கடைசி முனையில் இருந்து ஒரு கோடு அதன் பின் கொஞ்ச இடைவெளி விட்டு மற்றொரு கோடு வரைக. வரைந்த இரு கோடுகளையும் இரு புறங்களிலும் இணைக்கும் வண்ணம் மேலே ஒரு கோடு வரைய வேண்டும். அந்த கோட்டின் முனையில் இருந்து முக்கோண வடிவில் இரு புறங்களிலும் கோடு வரைய வேண்டும். இப்போது கோட்டையின் இரு புறங்களிலும் மதில் சுவர் போன்று நமக்கு கிடைத்துவிட்டது. கோட்டையின் நடுவில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு சிறு சிறு கோடுகளாக வரைக. அந்த சிறு சிறு கோடுகளை இணைக்கும் வண்ணம் மேல் புறமாக ஒரு கொடு நடுப்புறமாக ஒரு கொடு கீழ்நோக்கி ஒரு கொடு வரைக. அப்படியே எல்லா கோடுகளையும் வரைய வேண்டும். இதுவும் மதில் சுவர் போன்று உள்ளது. பின் அந்த மதில் சுவரின் வலது புறம், இடது புறம் கீழிருந்து மேலாக ஒரு கோடு வரைக. அதிலும் முக்கோண வடிவில் இரு முன்பு வரைந்தது போலவே வரைய வேண்டும். இப்போது கோட்டை நமக்கு கிடைத்து விட்டது. கோட்டையின் மேல் கோடி பறப்பது போன்று வரைந்தால் மட்டுமே முழு கோட்டை வடிவம் நமக்கு கிடைக்கும். எனவே கோட்டையின் நடு சுவரில் ஒரு கோடி வரைக, பின் வலது பக்கவாட்டிலும், இடது பக்கவாட்டிலும் ஒரு கோடி வரைக. அப்புறம் கோட்டைக்கு வாயிற் வரைய வேண்டும். நான் வரைவதை பாருங்களும் அதுவும் மிக மிக எளிது தான். இப்போது வாயிற் கதவு வரைந்த பின், கோட்டையின் மதில் சுவரில் ஜன்னல் இருப்பது போன்று வரைய வேண்டும். மூன்று பெரிய மதில் சுவரிலும் ஒரு ஜன்னல் வரைந்தால் போதுமானது. இப்போது முழு கோட்டை நாம் வரைந்தாச்சு.
No comments:
Post a Comment