இப்பொது கப் கேக் எப்படி வரையலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் இடது பக்கவாட்டில் ஒரு கோடு வரையுங்கள். பின் அடிப்புறமாக ஒரு கோடு வரையுங்கள். அந்த அடிப்புறமாக வரைந்த கோட்டின் அடிமுனையில் இருந்து வலது பக்கவாட்டில் ஒரு கோடு வரையுங்கள். பின் இரு பக்கவாட்டில் கோட்டினை இணைக்கும் வண்ணம் ஒரு வளைவு வளைவாக சிறு கோடுகளை வரைய வேண்டும். என்னை பாருங்கள். என் விடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும். அந்த வளைவு மேல் சிறு கோடு, கீழ் சிறு கொடு அப்படி வளைவு வளைவு போன்று அந்த கோடுகளை வரைய வேண்டும். அந்த சிறு சிறு கோடுகள் இரு பக்கவாட்டு கோடுகளையும் இணைக்கும். இப்போது நமக்கு கப் வடிவம் கிடைத்து விட்டது.
இப்போது அதில் கேக் இருப்பது போல் வரைய போகின்றோம். அதற்கு இடது பக்கவாட்டில் இருந்து ஒரு சிறு சிறு வளைவு மேல்நோக்கி போடுங்கள். பின் அதில் இருந்து ஒரு சிறுவளைவு அதை விட கொஞ்சம் பெரியதாக போடுங்கள். பின் ஒரு வளைவு மேல்நோக்கி வரைந்து அதை பெரியதாக இழுக்க வேண்டும். என் விடியோவை பாருங்கள் உங்களுக்கு எப்படி என்று புரியும். அப்புறம் நீங்கள் வரைந்த பெரிய வளைவில் இருந்து கீழ்நோக்கி வளைவு போட வேண்டும். முன்பு வரைந்த வளைவுகளை போன்றே கீழ்நோக்கி வரைய வேண்டும். அந்த வளைவு வலது பக்கவாட்டில் இணைத்து விடலாம். இப்போது கப் கேக் கிடைத்து விட்டது.
இப்போது அந்த கேக் இன் கப் இல் சிறு சிறு கோடுகளாக செங்குத்தாக போட்ட கோட்டில் இருந்து கீழ்புறமாக கோடுகளை வரைய வேண்டும். அந்த கோடுகள் கப் இல் 6 வரைந்தால் போதுமானது. இப்போது ஒரு அழகான கேக் அப்புறம் கப் வரைந்துவிட்டோம். இப்போது கேக் கிற்கு கண் வரைய வேண்டும். இடது புற கண்ணை முதலில் வரையுங்கள். பின் வலது புறத்தில் ஒரு வட்ட வடிவம் போன்று கண் வரையுங்கள். இடது புறம் வரைந்த கண் திறந்திருப்பது போலும், வலது புற கண் மூடி இருப்பது போலும் வரைந்தால் அழகாக இருக்கும். இப்போது அதற்கு ஒரு வாய் ஒன்றும் வரையலாம். வாயிற்கு முதலில் ஒரு சிறு செங்குத்து கொடு அந்த கோட்டை இணைக்கும் வண்ணம் சிறு வளைவு அவ்வளவு தான் வாய் நமக்கு கிடைத்துவிட்டது. இப்பொது அழகான ஒரு கப்பில் கேக் இருப்பது போன்றும், அந்த கேக் கிற்கு கண் வாய் இருப்பது போன்றும் வரைந்துவிட்டோம்.
எப்படி இருக்கிறது இந்த வீடியோ. உங்களுக்கும் வரைவதற்கு சுலபமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் எழுதி இருப்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் என் விடியோவை பாருங்கள். புரியும்...
No comments:
Post a Comment