Wednesday, November 29, 2023

ஒரு காபி கப் எப்படி வரைவது?

 ஒரு காபி கப் எப்படி வரைவது என்று பார்க்கலாம் இன்று... 




   முதலில் வட்ட வடிவில் ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். நான் வளையல் எடுத்திருக்கிறேன். நீங்களும் இது போல் எது வேண்டுமென்றாலும் வட்டம் போடுவது போல் எடுத்து கொள்ளலாம். முதலில் வளையலின் கீழ் புறமாக ஒரு கொடு வரையுங்கள். அந்த கோடு பாதி தட்டு போல் உள்ளதல்லவா

? ஹ்ம்ம். என்னை பார்த்து அது போல் போடுங்கள். பின் அதன் இரு ஒர புரங்களையும் ஒன்றாக சேருங்கள். அதன் மேல் ஒரு வளைவு வரையுங்கள். என்னை பின் தொடருங்கள் உங்களுக்கு வரைய எளிமையாக இருக்கும். இப்போது ஒரு கப் போல் நமக்கு கிடைத்துவிட்டது. அப்படித்தானே. ஹ்ம்ம். அந்த கப்-ன் மேல் வரைந்த வளைவுக்கு கீழே ஒரு வளைவு வரையுங்கள். இப்போது அடுத்து நாம் கைப்பிடி வரைய வேண்டும். கைப்பிடி வரைவதற்கு ஒரு சிறிய வளைவை அதன் வலது பக்கத்தில் வரையுங்கள். அந்த வளைவு வரைவதற்கு முன் நீங்கள் உன் காபி கப் பார்த்து கொள்ளுங்கள். அது போல் வரையுங்கள். இப்போது காபி கப் கண் வரைய வேண்டும். பின் வாய் போன்று வரைந்துகொள்ளுங்கள். காபி கப் மேலே ஒரு அழகையே இதயம் இருப்பது போன்று ஒரு வடிவம் வரைந்துகொள்ளலாம். அதன் அருகில் இரு புறங்களிலும் ஒரு சிறிய வளைவாக ஒரு வடிவம் வரைந்துகொள்ளுங்கள். இப்போது இதயத்தின் உள்ளே பென்சில் கொண்டு தீட்டுங்கள். காபி கப் நடுவில் காபி இருப்பது போன்று பென்சில் கொண்டு தீட்டுங்கள். ஐயோ நான் காபி கப் கண்ணிற்கு புருவம் வரைய மறந்துவிட்டேன். இப்போது கண்ணின் புருவம் வரைகிறேன். இப்போது எப்படி இருக்கிறது. இப்போது முழு காபி கப் அது ஒரு பொம்மை கப் போன்று அழகாக நமக்கு கிடைத்துவிட்டது. ஹ்ம்ம். நீங்களும் என்னை பின்தொடர்ந்து வரையுங்கள். 

No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...