பேப்பர் கப்பல் தண்ணீரில் செல்வது போன்று எப்படி வரைவது என்பதை சுலபமாக சொல்லி தருகின்றேன். பாருங்கள்.
வரைய கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் மேல்புறமாக ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள். பின் அதிலிருந்து கீழ்புறமாக ஒரு கொடு வரையுங்கள். கீழ்புறமாக வரைந்த கோட்டில் இருந்து பக்கவாட்டில் ஒரு கோடு போடுங்கள். இப்போது அது சாய்ந்த "N" போன்று இருக்கிறதல்லவா. ஹ்ம்ம். இப்போது முதலில் வரைந்த கோட்டின் முதல் புள்ளியில் இருந்து இடதுபுறமாக பக்கவாட்டில் ஒரு கோடு வரையுங்கள். அந்த கோட்டில் இருந்து கீழ்புறமாக ஒரு கோடு போடுங்கள். அதே போல் வலது பக்கவாட்டில் ஒரு கோடு கீழ்புறமாக வரையுங்கள். இப்போது பக்கவாட்டில் வரைந்த கோட்டினை இணையுங்கள். அடிப்புறமாக செங்குத்தாக கொடு போடுங்கள். இப்போது கப்பல் போன்று ஓரளவு கிடைத்திருக்கும். நடுவில் கீழ் நோக்கி ஒரு கோடு வரையுங்கள். இப்போது முழு கப்பல் நமக்கு கிடைத்துவிட்டது. தண்ணீர் அதன் பின் வரையவேண்டும். தண்ணீர் வரைவது என்பது மிக மிக எளிது. பாருங்கள். வரையுங்கள். வளைவு வளைவு போன்று சிறியதாக வரையுங்கள். கப்பலில் கீழ் புறமாக வளைவு வளைவாக போடுங்கள். இரு வளைவு வட்டத்தின் பாதி அளவு போன்று வரையுங்கள் இது போதுமானது. இப்போது பாருங்கள் தண்ணீரில் கப்பல் செல்வது போல் நமக்கு கிடைத்துவிட்டது. எப்படி இருக்கிறது.
No comments:
Post a Comment