Tuesday, July 15, 2025

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - See It's important to ur life

 சாரி ஏன் கேட்கல இப்படி கோவப்பட்டுக்கிட்டே இருக்கியே, எதுக்காக சாரி கேக்கல அப்படினா நான் கோவப்பட்டது சரி தான். நான் இப்பொழுது என்னுடைய கோபத்தை நியாப்படுத்துகிறேன். ஒண்ணு சொல்றன் நல்லா புரிஞ்சுக்கோங்க. எதுக்குமே கோவம் அப்படிங்கிறது பாதிப்பை தான் உண்டு பண்ணும். கோபம் வந்தால் உங்களுக்கு உள்ளுக்குள்ள நல்லாருக்கா இல்லனா ஒரு மாறி பத்தி எரியுதா? நல்லா இத நீங்க கவனிக்கணும், கோவம் உங்களுக்கு வருது அப்படினா நீங்க யாரு மேல கோவப்படுறீங்க அப்டிங்கிறத விட்ருங்க, முதல்ல உங்களுக்கு ஒரு பாதிப்பு வருது. இத முதல்ல புரிஞ்சுக்கோங்க. இத புரிஞ்சுக்கிட்டாலே போதும்.



 இப்பம்கடவுள் ஒருத்தர் இருக்காரு. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குதோ, இல்லையோ அத இப்பம் கேக்கல. அது வேற விஷயம். உங்க தனிப்பட்ட விருப்பம். இப்பம் மேலோகத்துல இயற்கைன்னு ஒன்னு இருக்கு. சட்ட, திட்டம்னு ஒன்னு இருக்கு. இப்பம் இந்த நேரம் என்னுடைய எதிராளி ஒரு தவறு செய்கிறார். அவர் செய்தது தவறு. எனக்கு கோவம் வருது. இப்பம் நான் கோவப்பட்டு அவர கத்து கத்துனு கதுரன். அவர் மேல எரிஞ்சு விழுறன், நான் கத்துன அப்றம் நீங்க சாரி கேக்க சொல்றிங்க. சாரி கேட்டா அது சரினு சொல்றிங்க. நான் கேக்கமுடியாதுனு சொல்றன். அப்டினா என்ன அர்த்தம் அவர் தப்பு செய்திருக்கிறார் அதற்கு நான் கோவப்பட்டிருக்கிறேன். நான் கோவப்பட்டது சரி தான். நீங்க என்ன நனைக்கிறிங்க அப்டினா. நான் கோவப்பட்டால் அவருக்கு ஒரு தண்டனை கொடுத்துருக்கன் நனைக்கிரிங்க.

 அதனால தான் நான் கோவமா பேசிருக்கன். அவருக்கு ஒரு தீர்வு கொடுக்கணும் அப்படினா கோவப்பட தேவை  இல்ல. நீங்க என்ன நனைக்கிறிங்க. தப்பு செஞ்ச எதிராளியை தண்டிக்கணும். அதுக்காக நீங்க கத்துறிங்க, அடிக்குறிங்க. இப்பம் இதுல இருந்து என்ன நடக்கதுன்னு நல்லா புரிஞ்சுக்கணும். இதுல புரிதல் இருந்தால் போதும். அது உங்களுக்கு வந்துட்டா போதும். இப்பம் நாம் எதிராளியை தண்டிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, நீங்க உங்களையே தண்டிக்குறிங்க, இதுதான் நடக்குது. நல்லா கவனிங்க. இப்பம் கோவம் அப்படிங்கிறது எப்டின்னா, ஒரு நெருப்பை தீயை எடுத்து அவர் மேலே போடப்போகிறோம். இது தான் கோவம். நான் என்ன கேக்குறன் ஒரு நெருப்பு கல்லை எடுத்துட்டீங்க. அவர் மேல் எரிவதற்குள் இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க. உங்க மேல அது விழுது. நீங்க எரிஞ்சுட்டு இருக்கீங்க. இதை உணருங்கள். நீங்கள் எரிந்த பின் தான் அவரை எரிக்க முடியும். இத புரிஞ்சுக்கோங்க. 



யார் யாரெல்லாம் கோவப்படுகிறார்களோ, அவர் அவரெல்லாம் முதலில் தன்னை தானே எரித்துக்கொள்வார்கள். அதற்கு பின் தான் அடுத்த ஆளை எதிராளியை எரிக்க முடியும். இது நிதர்சனமான உண்மை. மறுக்க கூடியதில்லை. இந்த புரிதல் உங்களுக்கு வந்தால் போதும். இத நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க அப்டினா போதும். கோவப்படணும், அப்டினா நான் எதுக்கு சாரி கேக்கணும், சாரி கேக்க வேண்டாம். விட்ருங்க. அது உங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனால் இத கவனிங்க. கோவப்பட்டா பாதிப்பு யாருக்கு வருகிறது என்று யோசித்து பாருங்கள். எனக்கு வருகிறது பாதிப்பு. இத புரிஞ்சுக்கோங்க. இந்த புரிதல் இருந்தா வந்திருச்சுனா நான் கோவப்படுறது புத்திசாலித்தனம் இல்லை. இது ஒரு கோமாளித்தனம் அப்படிங்கிறது உங்களுக்கு புரிஞ்சுருச்சுனா, கோவப்படமாட்டீங்க. 



இப்பம் நான்  கோவப்பட்டுட்டு சண்டை போட்டுட்டு மன்னிப்பே கேக்கல, அந்த கோவம் எனக்குள்ள வந்த பல நாட்கள் மூஞ்சிய தூக்கிவச்சுட்டே இருக்குறோம், யார்கூடவும் சரியா பேசுறதே இல்ல. அவங்களும் பேசமாடிகுறாங்க. இது கணவன், மனைவிக்குள்ள நடக்குது. அப்பா மகன், அண்ணன் தம்பிக்குள்ள நடக்குது. friends குள்ள நடக்குது. பாருங்க இப்பம் நான் என்ன சொல்றன்னா, நீங்க 2 பேருமே ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க. இந்த கடவுள் கொடுத்த உயிர் வாழ்க்கையை வாழுறதே சந்தோஷத்துக்காக தான். மகிழ்ச்சியா வாழ்வதற்காக தான் வாழுறோம். 



இப்போ என்னுடைய சந்தோஷம் முக்கியமா? இல்ல நான் பண்ணுனது சரி தான் என்று ஆதாரம் காட்டுவது முக்கியமா அப்படிங்கிறது தான் இருக்கு. இப்பம் எக்ஸாம்பிள் சந்தோஷத்துக்காக திருமணம் செய்துவிட்டு, சந்தோஷத்துக்காக நாம ஒண்ணா வாழுறது சரி, நான் நீ என்று வாழவே வேண்டாம். கோவப்பட்டிங்க அப்டினா பிரிஞ்சு போங்க பாக்கலாம். அப்டி நீங்க பிரிஞ்சு போனா லைப் முடிஞ்சுபோச்சு. 



சோ பிரிஞ்சு போனா தனியா வாழவும் முடியாது, ஒண்ணா இருந்தா பேசவும் மாட்டீங்க. நாம தான் பேசாம இருக்குறோம்ல எதுக்காக வாழுறோம். பேசாம விட்டுட்டு ஒடுங்களே,. இன்னைக்கே டைவோர்ஸ் பன்னிருங்க. காலைல ஒரு பிரச்னை வருது டைவோர்ஸ் பன்னிட்டு போங்களேன். இது இல்ல வாழ்க்கை. அது போகமுடியாது. அவ இல்லாம என்னால இருக்கமுடியாது. நான் இல்லாம அவ இருக்கமாட்டா. விடவும் மாட்டீங்க. ஒன்னாவும் இருப்பிங்க. பேசிக்கஉம் மாட்டீங்க. இங்க தான் நீங்க ஒன்னு நல்லா புரிஞ்சுக்கணும். எதுக்காக நீங்க வாழுறோம் அப்டினே மறந்து போயிட்டீங்க. இப்பம் நான் சொல்ற பாயிண்ட் நீங்க நிரூபிக்குறது தான் எனக்கு முக்கியமா, இல்ல நாம வாழ்க்கை வாழுறதே சந்தோஷத்துக்காக தான வாழுறோம். அவங்க சொன்னது அவ சொன்னது சரிண்ணே இருந்துட்டு போட்டுமே. 



நான் எதுக்கு இத புடிச்சுட்டு இருக்கனும். நான் எதுக்கு பெரிய ஆள்னு நிரூபிக்கனும். அப்படிங்கிற விஷயம் புரிஞ்சுருச்சுனா அடுத்த செகண்ட் நீங்க கரெக்டா இல்ல தப்பான்னு ல்லா இல்ல மன்னிச்சுருனு, கேட்டுட்டு போயிட்டே இருப்பிங்க. இப்படி இருக்குறவங்க தான் புத்திசாலி. இத வீண் பிடிவாதம் புடிக்குறவன் புத்திசாலி இல்லை. உங்க நோக்கம் நீங்க வாழுறதோட அர்த்தம் புரிஞ்சுருச்சுன போதும். 



No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...