Sunday, March 23, 2025

ஆரோக்கியமாக வாழ இப்படி சாப்பிடுங்கள்


 சிலருக்கு உணவுமுறைல எதை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை. தண்ணீர் கூட எப்படி அருந்தவேண்டும் என்று தெரிவதில்லை. தண்ணீர் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் போது நிச்சயம் குடிக்கவேண்டும். இதை நான் சொல்லவில்லை. போகர் சொல்கின்றார். நீரை சூடு பண்ணி தான் குடிக்க வேண்டும். இதை எல்லாரும் சொல்கின்றார்கள். மருத்துவர்கள் கூட சொல்கின்றார்கள். நீங்கள் தண்ணீரை சுடவச்சு ஆரவச்சு கூட குடிக்கலாம். இது போல் தயிரை கடைந்து மோராக்கி தான் சாப்பிட வேண்டும். தயிரை அப்படியே சாப்பிடக்கூடாது. அது மந்தமான புத்தியை கொடுக்கும். உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும். தயிரை உருக்கி வெண்ணெய் எடுத்து சாப்பிட்டால் கூட கொழுப்பு சேராது. அனால் தயிரை நேரடியாக சாப்பிடும் போது அதிகமான கொழுப்பு சத்து சேரும். இதுவந்து ரொம்ப கெடுதல். கேள்விபட்டுருப்பீங்க நிறைய பேருக்கு கேட்ட கொழுப்பு நிரைய இருக்கு சொல்வாங்க. தயிர் நிறைய சாப்பிடுபர்களுக்கு கேட்ட கொழுப்பு நிறைய சேரும். அதனால் தான் அந்த காலத்து சித்தர்கள் என்ன சொல்றாங்கன்னா தண்ணீரை சூடு பண்ணி சாப்பிடணும் அதுபோல் தயிரை மோராக கடைஞ்சு தான் சாப்பிட வேண்டும். தயிரை வெண்ணையாக்கி அந்த வெண்ணையை காய்ச்சு நெய்யாக்கி அதில் முருங்கை கீரை போட்டு அதனை பயன்படுத்துங்கள். சாப்பிடுங்கள். நம் முன்னோர்கள் எல்லோரும் இப்படி தான் சாப்பிட்டார்கள். என்ன அப்படின்னா வெண்ணெய் எடுத்து வைப்பார்கள். அந்த வெண்ணையில் முருங்கை கீரை போட்டு அதை உருக்கி நெய் எடுத்து சாப்பிட்டு வந்தார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த முருங்கை கீரை அதில் போட்டு பொரிக்கும் போது அதில் உள்ள நச்சுத்தன்மை அது எடுத்து விடும். கொழுப்பு சத்தை குறைத்துவிடும். இந்த முருங்கை கீரை பல வகையான மருத்துவ குணம் கொண்டது. முருங்கை மரம் சம்மந்தப்பட்ட அனைத்துமே மருத்துவ குணமானது தான். இதே போல் நீங்கள் இந்த உப்பை வருக்கும் போது முருங்கை கீரை போட்டு அந்த கீரை கருகும் வரை வறுக்க வேண்டும். கல் உப்பை பற்றி சொல்கிறேன். இப்படி நீங்கள் வறுத்தால் அந்த உப்பில் உள்ள சத்துக்களோடு இந்த முருங்கை கீரையின் இரும்பு சத்து சேர்ந்து அந்த கல் உப்பு ஒரு மருந்தாக மாறி விடும். அப்போ பாருங்க அந்த உப்பை நீங்கள் மருந்தாக பயன்படுத்தலாம். இதே போல் முருங்கை கீரை நெய்யில் போட்டு வறுக்கும் போது அந்த நெய் மருந்தாக மாறி விடுகிறது. இப்படி தான் நெய்யை சாப்பிடவேண்டும். இது போல் தான் தயிரை மோராக கடைந்து தான் சாப்பிட வேண்டும். நம்ம முன்னோர்கள், சித்தர்கள், நியானிகள் இப்படி தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை படிப்பதில்லை. யாரேனும் சொன்னால் அதை கண்டுகொள்வதில்லை. சித்தர்கள் எல்லாவற்றையும் மறைக்கவில்லை தெளிவாக சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நம்ம படிகளை. கண்டதை எல்லாம் தேடி தேடி படிக்கிறோம். பார்க்கிறோம். இதை எல்லாம் தேடி படியுங்கள் தெரியும். ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க. நீங்கள் உங்கள் ஆழ்மனதில் எதை விரும்பி படிக்கிறீர்களோ அது எவ்ளோபெரிய பாடமாக இருந்தாலும் சுலபமாக புரியும். நீங்கள் விருப்பம் இல்லாமல் ஒரு விஷத்தை படித்தால் அது உங்களுக்கு புரியாது. இதுதான் காரணம். இந்த சித்தர்கள் நிறைய பாடல்கள் கூட படிச்சு பாருங்கள். அதுல எல்லவிளக்கமும் தெளிவாக இருக்கும். இதை எல்லாம் படியுங்கள் தெரிந்துவைத்து கொள்ளுங்கள். 


1. தயிரை மோராக்கி சாப்பிடுங்கள்

 2. தயிரை வெண்ணை அதில் முருங்கை கீரை போட்டு வணக்கி நெய் ஆக்கி சாப்பிடுங்கள்.

3. தண்ணீரை சூடு செய்து குடியுங்கள். ஆற வைத்து கூட குடிக்கலாம். 

4. கல் உப்பை சாப்பிடுங்கள்.அந்த கல் உப்பில் முருங்கை கீரை போட்டுஅந்த கீரை கருகும் வரை அதனை வணக்கி சாப்பிடுங்கள்.
















No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...