Monday, December 25, 2023

"O" என்ற எழுத்தை பயன்படுத்தி ஆந்தை எப்படி வரைவது

 "O" என்ற எழுத்தை பயன்படுத்தி ஆந்தை எப்படி வரைவது 




நான் வரைவதை முழுமையாக பாருங்கள் மிக மிக எளிதாக உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். முதலில் O என்ற ஆங்கில எழுத்தை வரைந்துகொள்ளுங்கள். நாம் அந்த O எழுத்தின் இரு ஓரங்களிலும் காத்து வரைய வேண்டும். பின் அந்த O எழுத்திற்குள் மேல்புறமாக இரு கண்கள் வரைய வேண்டும். கண்ணிற்குள் பென்சில் வைத்து கீழாக வர்ணம் தீட்டுங்கள். முக்கால்வாசி அளவிற்கு பென்சில் கொண்டு தீட்டுங்கள். பின் நமக்கு தானாகவே மேலே வெள்ளை விழி கிடைத்துவிடும். பிறகு ஆந்தையின் வாய் வரைந்துகொள்ளுங்கள். அந்த வாய் சிறியதாக கிழ்நோக்கிய முக்கோண வடிவில் வரையுங்கள். பின் ஆந்தையின் இறக்கை வரைய போகின்றோம். அதற்கு இரு புறங்களிலும் வளைவாக கொடு போட்டு கொள்ளுங்கள். அந்த கோட்டினுள் சிறு சிறு வளைவாக போடுங்கள். இப்போது ஆந்தையின் இறக்கை நமக்கு கிடைத்துவிட்டது. அதன் பின் ஆந்தையின் கால் வரைய வேண்டும். கால் வரைவது எளிது தான். நான் வரைவதை பார்த்து கொண்டே வரையுங்கள். ஆந்தையின் கால் வரைந்த பின் அது மரக்கிளையில் அமர்ந்திருப்பது போன்று வரைய வேண்டும். மரக்கிளை வரைவது வளைவாக அதன் கால் கீழிருந்து மேலாக ஒரு கொடு வரையுங்கள். அந்த கிளையில் இப்போது இல்லை இருப்பது போன்று வரையலாம். அது நன்றாக இருக்கும். இப்போது உங்களுக்குள் அழகான ஆந்தை அது மரக்கிளையில் அமர்ந்திருப்பது போன்று வரைந்தாச்சு. எப்படி இருக்கிறது...

No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...