எண்ணூர் எரிவாயு கசிவு - அவசர செய்தி
சென்னையில் உள்ள எண்ணூர் கோரமண்டல கம்பெனில இருந்து அம்மோனியா கசிகிறது என்று ஒருவருக்கு தொலைபேசி மூலமாக தகவல் வருகின்றது. அவர் அதை மற்றவர்க்கு பகிர்கிறார். ஊரில் உள்ள அனைவருக்கு அந்த தகவல் பகிரப்படுகிறது. இப்படி அமோனியா கசிந்தால் மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகுமாம். அந்த ஊருல உள்ள மக்கள் எல்லோரின் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். ஊரில் உள்ள ஆண்கள் ஊரில் உள்ள பெரிய தலைவரை சந்திக்க செல்கின்றனர். அந்த தலைவரின் பெயர் என்னவென்றால் " குமரவேல்". அந்த தலைவர் மிகவும் நல்லவர். அவர் அவருடைய காரில் ஊரில் உள்ள மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி சென்று தொலைவில் விட்டிருக்கிறார். அம்மோனியா மிகவும் அபாயகரமான ஒரு வேதி பொருள் ஆகும். அந்த ஊரில் உள்ள மக்களில் சிலர் இரவில் கசிவு ஏற்பட்டதால் இந்த நொடி வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். சுமார் 25 பேர் முதல் 30 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு வாந்தி, ஒரு சிலருக்கு கண் எரிச்சல். ஒரு சிலருக்கு மயக்கம் இருக்கின்றதாம். அந்த எண்ணூர் அமோனியா வேதி பொருள் கம்பெனி அதன் குழாய்களை கடல் வழியாக இறக்கியிருக்கின்றார்கள். அதனால் அந்த குழாய் பாதுகாப்பற்றதாய் உள்ளதாம். அந்த குழாய் சுற்றி கற்கள் கொட்டியிருக்கிறார்கள். இப்போது வந்த புயல் மிக பெரிய புயல். அந்த புயலினால் கடல் அலைகள் அந்த கற்களில் மோதி இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. இது இரண்டாம் முறை ஏற்படுகிற கசிவு. இதற்கு முன்பு ஏற்பட்ட கசிவு பெரிய தலைகளை வைத்து சுமுகமாக பேசி முடிக்கப்பட்டது. இந்த முறை இரண்டாம் முறை ஏற்பட்ட கசிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரிய குப்பம், சின்ன குப்பம் பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயர் கோரமண்டல். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் தான். அவர்கள் சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு உள்ள இப்போது வரை கம்பெனியை சுற்றி போராட்டம் செய்து வருகின்றனர். பாதுகாப்பற்ற கம்பெனி இதனை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
