Sunday, July 14, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளம் சிறுமி சர்வாணிகா - Ambition Chess grand master

 


இன்னும் கொஞ்ச வருசத்துல chess grand master ஆக மாறி விடுவேன் என்று ஒரு சிறுமி சொல்கின்றார். அவர் என்ன சொல்கின்றார் என்பதை நான் விவரிக்கிறேன் பாருங்கள். நம் தமிழக வீரர்கள் chess grand master தட்டி தூக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதில் எந்த வித ஐயமுமில்லை. அதில் நம் தமிழத்தில் ப்ரக்யானந்தா, குகேன், வைசாலி போன்று நானும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வேன் என்று மழலை குரலில் சொல்கிறார் 9 வயதே நிரம்பிய சர்வாணிகா. இவரை நீங்கள் இதற்கு முன்பு கூட இவரை பல செய்தி சேனல் லில் பார்த்திருப்பீர்கள். ஆம் இரண்டு வருடத்திற்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைபெற்ற chess போற்றியில் கிராண்ட் மாஸ்டரை வென்று அனைவரின் கவனத்தை பெற்றவர் தான் இந்த சர்வாணிகா. தன்னுடைய இளம் இந்த சிறுவயதிலேயே தேசிய, மாநில அளவில் பதக்கங்களை வென்ற இவர் நம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நான்கு வயதாக இருந்த போதே chess விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். அந்த விளையாட்டை கற்றும் தேர்ந்தவர். இப்போது மிக உயர்ந்த அங்கீகாரம் பெற்ற woman கேண்டிடேட் மாஸ்டர் படத்தை வென்றிருக்கிறார். அதிலும் நம் ஆசியாவிலேயே இந்த படத்தை வென்ற இளம் சிறுமி என்ற பெயரையும் நம் தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார். இந்த சிறுமியின் திறமையை அறிந்த நம் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய அலுவலத்திற்கு அழைத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த அசத்தல் சாதனையை படைத்த அதிசிய சிறுமியிடம் பேசுகையில் அவர் சாதனைகளை அழகான மழலை குரலில் பட்டியலிட்டார். அவர் கூறுவது என்னவென்றால் ஒடிசாவில் நேஷனல் ஸ்கூல் விளையாண்டாராம். அங்கு அவர் சாம்பியன் பட்டம் வென்றாராம். அதன் பின்பு ஏசியன் ஸ்கூல்ஸ் விளையாண்டாராம் ஸ்ரீலங்கா . அங்கு அவர் 23/23 ஏசியன் ரெகார்ட் பண்ணியிருக்கிறாராம். அதன் பின்பு துபாய்ல விளையாண்டாராம். அப்படி பல பல சாதனைகளை கூறினார். இத்தனை சாதனைகளை வென்ற சர்வாணிகா கிராண்ட் மாஸ்டர் ஆவது தனது லட்சியம் என்று சொல்கின்றார். எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு முதலில் வருபவருக்கு அந்த நாட்டின் பாடல் போடுவார்கள். அவர் வெளிநாட்டில் வென்ற போது நம் இந்தியாவின் நேஷனல் அந்தம் பாடியது மிகவும் பெருமையாக இருந்தது என்று நியூஸ் சேனல் களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதை உங்களோடு பகிர வேண்டும் என்று எழுதியுள்ளேன். இது உபயோகமாக இருந்தால் பிடித்தால் பகிருங்கள்.

No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...