இதற்கு தேவையானது:
ஒரு கப் - அரிசி மாவு
முக்கால் கப் - மைதா மாவு அல்லது கோதுமை மாவு
கால் கப் - ரவை (வறுத்தது அல்லது வறுக்காதது)
கால் ஸ்பூன் - பெருங்காயத்தூள்
ஒரு ஸ்பூன் - மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவைப்பட்டால் பச்சை மிளகாய்
ஒரு சிறிய துண்டு இஞ்சி
பொடியா பிச்சுப்போட்ட கருவேப்பிலை
சின்ன வெங்காயம் - 5
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். சப்பாத்தி மாவு போன்று பிணைய வேண்டும். நன்றாக தட்டி தட்டி பிணைய வேண்டும். சப்பாத்தி மாவு போன்றே பிணைத்து எடுத்து கொள்ளவும். மிளகாய் தூள் இதில் சேர்த்ததனால் கொஞ்சம் மஞ்சள் சிவப்பு கலந்த கலரில் அழகாக இருக்கும். இந்த மாவினை பிணைந்து விட்டு நீங்கள் ஊறவைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. உடனே தட்டி எடுத்துக்கொள்ளலாம். ஒரு எலுமிச்சம் பழம் அளவிற்கு மாவை உருட்டி கொள்ளுங்கள். அதை ஒரு வாழை இழை இல்லை என்றால் ஒரு தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வட்ட வடிவில் தட்டி கொள்ளுங்கள். சப்பாத்தி போடுவது போல் தட்டி எடுத்துக்கொள்ளுங்கள். கையை வைத்து தட்டுங்கள் சப்பாத்தி மெஷின் பயன்படுத்த வேண்டாம். சப்பாத்தி மெஷின் நீங்கள் பயன்படுத்தினால் ரொம்ப மெல்லியதாகிவிடும். கையை வைத்து தட்டி எடுத்துக்கொண்டாலே போதுமானது. இப்போது மாவு தயாராகிவிட்டது
ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வையுங்கள். எண்ணெய் நன்றாக சூடு வந்ததும் அதில் நீங்கள் தட்டி வைத்திருக்கும் மாவை போடுங்கள். இதில் நீங்கள் சோடா உப்பு, தயிர் என்று எதுவம் சேர்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. இது சாப்பிடுவதற்கு மொறு மொறுவென்று இருக்கும். அரிசி மாவு, ரவை இதில் சேர்க்கப்பட்டிருப்பதால் நன்றாக மொறு மொறுவென்று இருக்கும். இது இரண்டு பக்கமும் வெந்து எண்ணையில் உள்ள சலசலப்பு அடங்கியவுடன் எடுத்துவிடுங்கள். பூரி போன்று இருக்கும். சுட சுட நாம தயார் செய்த மொறு மொறு மத்தூர் வடை தயாராகி விட்டது. எப்படி இருக்கிறது என்று செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

No comments:
Post a Comment