இப்பொது நாம் பறவை பறப்பது போன்று ஒரு வட்ட வரைபடம் வரைய போகின்றோம். என்னை பின்தொடருங்கள். முதலில் இரு வட்டங்களை வரைந்துவைத்து கொள்ளுங்கள். அதில் சிறிய வட்டத்தில் பறவை போன்று ஒன்றை நான் வரைகிறேன் பாருங்கள். எப்படி என்று தெரிகிறதா? முதலில் பறவையின் உடல் அமைப்பை வரையுங்கள் பின் அதன் ரெக்கைகளை வரையலாம். இறக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரைந்த பின்பு நமக்கு பறவை அழகாக கிடைத்து விடும். பின்பு அதே போன்று அதன் பின்பு ஒரு பறவை வரையலாம். வரைந்தாச்சா? ஹ்ம்ம். இப்போது நடுவில் உள்ள பறவையின் முன்னே ஒரு பறவையை வரையலாம். நீங்கள் மெதுவாக வரையுங்கள்.
நான் வரைவது உங்களுக்கு தெளிவாக புரியும் என்று நம்புகிறேன். மூன்று பறவை வரைந்தால் போதுமானது. உங்களுக்கு தேவை என்றால் உங்கள் விருப்பம் போல் இன்னொரு பறவை கூட வரைந்துகொள்ளாம். அது உங்கள் விருப்பம். மூன்று பறவைகளை வரைந்த பின்பு நான் என்ன செய்கின்றேன் என்று கவனியுங்கள். நான் அந்த மூன்று பறவைகளுக்கும் பென்சில் கொண்டு உள்ளே தீட்டுகின்றேன். பென்சில் வைத்து பறவையின் உள்ளே கலர் அடிப்பது போல் நான் அடிக்கிறேன். முதலில் கடைசியில் உள்ள பறவை, அடுத்து நடுவில் உள்ள பறவை, அடுத்து அதன் முன்னே உள்ள பறவை. மூன்று பறவைகளுக்கும் நாம் பென்சில் கொண்டு உள்ளே அடித்துவிட்டோம்.
இப்போது முழு பறவை நமக்கு கிடைத்துவிட்டது. பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது அல்லவா? ஹ்ம்ம். அடுத்ததாக, பெரிய வட்டத்தில் கீழே கீழாக ஒரு கோடு போடுங்கள். அந்த கோடானது மணல் போன்றது. இதற்கு அளவுகோல் தேவையில்லை. நம் கை கொண்டு வரைந்தாலே போதுமானது. பின் அதில் ஒரு செடி வரையலாம். அந்த செடி வரைவதற்கு முதலில் அதன் காம்பு போல் வரையவேண்டும். பின் அதில் ஒவ்வொரு இலைகளை வரைய வேண்டும். அதே போன்று அதன் அருகில் இன்னும் ஒரு காம்பு இலைகள் இருப்பது போல் வரையலாம். செடிகளின் நடுவில் ஒரு ஒரு காம்பு அதிலும் இலைகள் இருப்பது போன்று வரையலாம். இப்போது முழு செடி ஒன்று நமக்கு கிடைத்துவிட்டது அல்லவா? இதுவும் பாருங்கள் எவ்வளவு அழகாக உள்ளது ஹ்ம்ம்.
அந்த செடியின் கீழே சிறு சிறு புற்கள் இருப்பது போன்று நீங்கள் வரைந்துகொள்ளுங்கள். இதுவும் நன்றாக இருக்கும். பின் கீழே மணல் இருப்பது போல் பென்சில் கொண்டு அடித்துக்கொள்ளுங்கள். அதன் அருகில் மற்றும் பல புற்கள் வளர்ந்திருப்பது போல் வரைந்துகொள்ளலாம். இப்போது பாருங்கள் பறவைகள் பார்ப்பது போன்றும் கீழே அழகிய செடிகள் இருப்பது போன்றும் ஒரு அழகிய வரைபடம் வரைந்தாச்சு. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
இது போன்று வாரத்திற்கு ஒரு முறை ஒரு வரைபடம் வரைய நான் சொல்லி தருகின்றேன். என்னை பின்தொடருங்கள்.
No comments:
Post a Comment