எல்லோருக்கும் வணக்கம்,
எங்க வாழ்க்கையில எங்களுக்கு கிடைச்ச சொர்க்கம் அப்படினா அது எங்க ஜிம்மி தான். யாரு அந்த ஜிம்மி. ஜிம்மி என்றால் என்ன? ஒருசிலர் யூகிச்சுரப்பிங்க. ஜிம்மி அப்படினா நாய்னு. ஜிம்மி எங்க வீட்டுல உள்ள செல்ல பிள்ளை. ஆமா. அன்பு, அறிவு, பொறுமை, இரக்கம், எல்லாமே எங்க ஜிம்மி கிட்ட ரொம்ப அதிகம். அந்த ஜிம்மி பத்திதான் நான் இந்த வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன். எனக்கு நாய் வளர்க்குறதுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே எனக்கு நாய் வளர்க்க ரொம்ப ஆசை. எங்க வீடு வாடகை வீடு. அதனால் என்னால் வளர்க்க முடியவில்லை.
நான் படித்துமுடித்து ஒரு நல்லவேலைக்கு சென்ற பிறகு, என் பெற்றோரின் அனுமதியுடன் காதல் திருமணம் செய்துகொண்டேன். . என் மனைவி வீட்டில் அவள் பூனை வளர்க்கிறாள். அவளுக்கு பூனை என்றால் ரொம்ப பிடிக்கும். அவள் வைத்திருக்கும் பூனையின் பெயர் வட்டம். அது வெள்ளை நிற பூனை. அதில் கருப்பு நிறத்தில் வட்டம் இருக்குமாம். அதனால் வட்டம் என்று பெயர் வைத்துவிட்டால். வித்தியாசமாக உள்ளதல்லவா? ஆம்.
எனக்கு திருமணம் முடிந்தது. நான் சென்னையில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தது. வாரம் ஒருமுறை இரு நாட்கள் சனி மற்றும் நியாயிற்று கிழமை வந்து என் மனைவியை பார்த்துவிட்டு செல்வேன். என் மனைவியின் வீடு சொந்த வீடு. எனக்கு நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசையை என் மனைவியிடம் கூறினேன். அவளோ இல்லை வேண்டாம். பூனை இருக்கின்றது என்று கூறினால். எப்படியாவது சம்மதிக்கவைக்க நினைத்தேன். அதற்காக திட்டமெல்லாம் போட்டேன். என்ன இது நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசைக்காக திட்டமா? உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அனால் இது தான் உண்மை. என் மனைவியையும் அவள் அம்மாவையும் சம்மதிக்க வைக்க நாய்கள் ஜாக்கிரதை படத்தை போட்டு காண்பித்தேன். அவர்கள் அதை பார்த்தவுடன் கொஞ்சம் மனம் இறங்கினார்கள்.
நாய் வளர்க்க சம்மதித்தார்கள். என் அத்தைக்கு முழு விருப்பம். அனால் என் மனைவி பூனை மீது கொண்ட பாசத்தால் கொஞ்சம் யோசித்தால். பிறகு என் ஆசை நிறைவேற வேண்டுமென அவள் சம்மதித்தாள். என்ன நாய் வாங்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்று என்னிடம் கேட்டாள். நான் சிறு வயதில் இருந்தே லாப்ரடார் ரெட்ரீவர் வாங்க வேண்டும் என்று ஆசை. அது எப்படி வந்தது என்றால் என் வீட்டின் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு வீட்டில் இந்த வகை நாய் தான் வளர்த்தார்கள். அது பார்ப்பதற்கு மிக அழகானது. யாரையும் கடிக்காது. குழந்தை போன்றது. சொன்ன சொல் கேட்பது. எதையும் எளிதில் புரிந்துகொள்ள கூடிய அறிவு அதற்கு உண்டு என்பதை நான் கண்கூடாக பார்த்தேன்.
நான் என் மனைவிக்கு ஜேர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் போட்டோ அனுப்பினேன்.
இதில் எது பிடித்திருக்கிறது என்று சொல் என்றேன். அதற்கு அவள் நீ என்ன வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறாய் என்று கேட்டாள். அவளிடம் நான் "லாப்ரடார்" வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று கூறினேன். அதற்கு அவளும் சரி, உன் விருப்பம் என்று சொல்லிவிட்டாள். எனக்கு ரொம்ப சந்தோஷம். அவளுக்கு அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை இருப்பினும், என் ஆசைக்காக சரி என்று சொல்லிவிட்டாள். என் சந்தோஷம் தான் அவள் சந்தோஷம் எப்பொழுதும்.

No comments:
Post a Comment