Monday, March 24, 2025

பணத்தை நீங்கள் எப்படி பார்க்க வேண்டும்? (Don't run after money)

பணத்தை நீங்கள் எப்படி பார்க்க வேண்டும்? 

 பணம் அப்படினா என்ன? 





பணம் அப்படிங்கிறது பாத்தீங்கன்னா ரொம்ப அற்புதமான ஒரு விஷயம். ஆமா. ஏன் தெரியுமா? 

அந்த பணம்னு ஒன்னு இருந்துச்சுன்னா நீங்க இந்த உலகத்துல என்ன வேணும்னு ஆசைப்படுறீங்களோ அது எல்லாம் கிடைக்கும். ஒரு எளிமையான ஒரு பொது அறிவு சொல்லலாம். நீங்க உண்மையாவே பணத்த விரும்புறீங்களா? அப்டினா நீங்க பணத்த நேசிக்கல, பொருளை தான் நேசிக்கின்றிர்கள். எப்படி சொல்லலாம். ஹ்ம்ம் எனக்கு ஒரு நல்ல வீடு, அழகான கார், வித விதமான அலங்கார பொருட்கள், ஒரு அருமையான வேலை, அழகான ஒரு பங்களா, இந்த உலகத்துல நான் போகாத இடமே இருக்க கூடாது. இப்படி என்ன என்னவெல்லாம் இந்த உலகத்துல நீங்க ஆசைபடுறிங்களோ, ரசிக்குறீங்களோ, எதுவெல்லாம் பிடிக்குமோ, இவை அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு உங்களுக்கு என்ன தேவை? சொல்லுங்க. பணம். அதனால நீங்க பணத்த நேசியுங்கள். அதை காதலியுங்கள். அத ரொம்ப அளவுக்கதிகமாக காதலியுங்கள். ஆனா ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன். அது பின்னாடி மட்டும் போகாதீர்கள்.  இதுல ஒன்னு சொல்றன். அத நீங்க புரிஞ்சுக்கணும். ஒரு சின்ன மாற்றம் தான். எனக்கு ஒன்ன பிடிக்கும் சொல்றதுக்கும், பணம் அத துரத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கு. அத ரசியுங்கள், காதலியுங்கள், அளவுகடந்த விருப்பம் கொள்ளுங்கள். தப்பில்ல. ஆனால் அதை பின்தொடராதீர்கள். அது பின்னாடி நீங்க துரத்தினால், வெறுப்பு வந்துவிடும். 




பணம் அப்படிங்கிறது வந்து ஒரு மீடியா அது உங்களுக்கு எல்லாவற்றையும் ஈட்டுக்கொடுக்கும். உங்களுக்கு பிடிச்சது பணம் இல்ல பொருள் தான். நான் சொல்றது கரெக்ட் தான. இந்த உலகத்துல நீங்க பிறந்தது அப்படிங்கிறது நீங்களும் நானும் இந்த உலகத்துல உள்ள செல்வதை அனுபவிக்க தான் பிறந்துருக்கோம். இந்த உடம்புல ஒரு நாள் சட்டை போடணும் அப்படினா அதுக்கு பணம் வேணும். எனக்கு தூக்கம் வருது அப்படினா நான் படுக்குற மெத்தை சூப்பரா இருக்கனும். நான் வாழனும் அதுக்கு வீடு வேணும் அதுக்கு பணம் வேணும். அதனால பணம்ன்றது ஆசைப்படுறது தப்பு இல்ல. அத பயன்படுத்துறது தப்பு இல்ல. அத பிரயோகிக்கிறது தப்பு இல்ல. அத காதலிக்குறது தப்பு இல்ல. அது பின்னாடி போறது தான் பெரிய தப்பு. நல்ல புரிஞ்சுக்கோங்க. இது 2 க்கும், வித்யாசம் இருக்கு. அப்படின்னா நான் பணம் பின்னாடி போகலன்னா அது எனக்கு எப்படி கிடைக்கும்? நீங்க போகலன்னா தான் அது கிடைக்கும். அத துரத்துனா கிடைக்கவே கிடைக்காது.




இது தான் இருக்குறதுலயே மிகப்பெரிய உண்மை. இந்த ரகசியத்த நீங்க தெரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கோங்க. இந்த உலகத்துல இருக்குற அத்தனை பொருளையும் இந்த உலகம் நமக்கு கொடுப்பதற்காக தான் உருவாக்க பட்டிருக்கிறது. ஆனால் அது பின்னால் நீங்கபோகக்கூடாது . நீங்க இந்த புரிஞ்சுக்கிட்டா போதும். இங்க தான்  ஒரு சூட்சமம் இருக்குது. புரியுதா. புரிஞ்சுருக்கும் நெனக்கிறேன். இந்த உலகத்துல எல்லோரும் கேக்குற கேள்வி என்னன்னா நான் ஆன்மிகம் தெரிஞ்சுக்கணும், நான் நல்லொழுக்கம் கற்றுக்கொள்ள வேண்டும் அப்படினு ஆச இருக்கு. ஆனா ஆன்மிகம் உள்ளே நீங்கள் செல்லவேண்டும் என்றால் பொருள் தன்மையை முதலில் இழக்க வேண்டும். அனைத்தையும் துறந்துவிட்டு தான் போக வேண்டும். இது வந்து என்ன கேட்டா மிக பெரிய கோமாளி தனம். நம்மள முட்டாள் ஆக்குறாங்க அப்படினு தான் செல்வன்.  



இதற்கும் ஆன்மிகத்திற்கும், பணத்திற்கும், பொருளுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்ல. புரியுதா? இது எங்க இருந்து நம்ம மக்களுக்கு ஒரு எண்ணம் வந்துச்சுனு தெர்ல. துறவு அப்படிங்கிற வார்த்தைய எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்க. துறவு அப்படிங்கிறது நான் எல்லாவற்றையும் விடணும், அப்படினா தான் நான் ஆன்மிகத்திற்கும் செல்ல முடியும் அப்படிங்கிறது இல்ல. துறவு என்பது வெளியில் இருக்கக்கூடிய பொருள்  தன்மையில் இல்லை. எனக்கு உள்ளுக்குள்ள இருக்குற உள்ளதுக்குள்ள துறவு இருக்கனும். துறவுன்னா என்ன அப்படினா, எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் எதையும் சொந்தம் கொண்டாட கூடாது. இப்பம்  இத எப்படி சொல்லலாம் அப்படினா அனுபவிக்குறதுக்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், வித்யாசம் இருக்கு. 

இப்பம் ஒரு பொருள பயன்படுதுறன் தாராளமா பயன்படுத்தலாம். ஒரு அழகான கார் வச்சுக்கலாம். நல்ல வீடு வச்சுக்கலாம். ஒரு நல்ல பதவில இருக்கலாம். நிறைய நகை போட்டுக்கொள்ளலாம். நல்ல நல்ல வித விதமான சட்டை பேண்ட் போட்டுக்கலாம். ஆனால் இது எதுவுமே உன்னோடு இல்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். அத சொந்தம் கொண்டாடுவதற்கு நிறைய வித்யாசம் இருக்கு. ஒரு பொருளை நான் போடுகிறதாலயோ, இல்லை அதை அனுபவிப்பதாலோ எந்த பிரச்னையும் இல்ல. ஆனா இது என்னோடு அப்படினு நீங்க சொந்தம் கொண்டாடுவீங்க அப்படினா அங்க தான் உங்களுக்கு பிரச்னை ஆரம்பிக்குது. இதை தான் துறவு என்று சொல்கிறோம். எதை நீங்கள் துறக்க வேண்டும். ஏன் இந்த வார்த்தை வந்தது அப்படினா நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்கள். அதனால் தான் அதை துறவு என்று  அழைத்தார்கள். 



இந்த உலகத்திற்கே நீங்கள் ராஜாவாக  இருந்தாலும் அதை சொந்தம் கொண்டாடாமல் அதை அனுபவித்தால் நீங்கள் இதை புரிந்துகொண்டால் நீங்கள் தான் ஆன்மிகவாதி. மனிதன் என்பவன் ஒரு உணர்வாளன். உணர்வை தான் தேடுகிறான். இதுல தப்பு இல்ல. உணர்வு வேண்டும் அப்படினா அந்த பொருள் வேணும். அந்த பொருள் வேணும் அப்படினா அதுக்கு எனக்கு பணம் வேணும். பணத்தை ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் அதை துரத்தாதீர்கள். ஒரு கார் ஆடி கார் மேல நீங்க ஆசைப்படுறீங்க. அந்த கார் வாங்கி ஓட்டுரிங்க அத ஓட்டும் போது வர அந்த சந்தோசமான உணர்வு அதுக்காக தான் பணத்தை தேடுறீங்க. பணம் அவசியம் தான் ஆனால் அது நாம் அனுபவிக்கும் பொருளுக்காக தான் தேவைப்படுகிறது இதை புரிந்துகொள்ளுங்கள் போதும்.



Sunday, March 23, 2025

ஆரோக்கியமாக வாழ இப்படி சாப்பிடுங்கள்


 சிலருக்கு உணவுமுறைல எதை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை. தண்ணீர் கூட எப்படி அருந்தவேண்டும் என்று தெரிவதில்லை. தண்ணீர் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் போது நிச்சயம் குடிக்கவேண்டும். இதை நான் சொல்லவில்லை. போகர் சொல்கின்றார். நீரை சூடு பண்ணி தான் குடிக்க வேண்டும். இதை எல்லாரும் சொல்கின்றார்கள். மருத்துவர்கள் கூட சொல்கின்றார்கள். நீங்கள் தண்ணீரை சுடவச்சு ஆரவச்சு கூட குடிக்கலாம். இது போல் தயிரை கடைந்து மோராக்கி தான் சாப்பிட வேண்டும். தயிரை அப்படியே சாப்பிடக்கூடாது. அது மந்தமான புத்தியை கொடுக்கும். உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும். தயிரை உருக்கி வெண்ணெய் எடுத்து சாப்பிட்டால் கூட கொழுப்பு சேராது. அனால் தயிரை நேரடியாக சாப்பிடும் போது அதிகமான கொழுப்பு சத்து சேரும். இதுவந்து ரொம்ப கெடுதல். கேள்விபட்டுருப்பீங்க நிறைய பேருக்கு கேட்ட கொழுப்பு நிரைய இருக்கு சொல்வாங்க. தயிர் நிறைய சாப்பிடுபர்களுக்கு கேட்ட கொழுப்பு நிறைய சேரும். அதனால் தான் அந்த காலத்து சித்தர்கள் என்ன சொல்றாங்கன்னா தண்ணீரை சூடு பண்ணி சாப்பிடணும் அதுபோல் தயிரை மோராக கடைஞ்சு தான் சாப்பிட வேண்டும். தயிரை வெண்ணையாக்கி அந்த வெண்ணையை காய்ச்சு நெய்யாக்கி அதில் முருங்கை கீரை போட்டு அதனை பயன்படுத்துங்கள். சாப்பிடுங்கள். நம் முன்னோர்கள் எல்லோரும் இப்படி தான் சாப்பிட்டார்கள். என்ன அப்படின்னா வெண்ணெய் எடுத்து வைப்பார்கள். அந்த வெண்ணையில் முருங்கை கீரை போட்டு அதை உருக்கி நெய் எடுத்து சாப்பிட்டு வந்தார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த முருங்கை கீரை அதில் போட்டு பொரிக்கும் போது அதில் உள்ள நச்சுத்தன்மை அது எடுத்து விடும். கொழுப்பு சத்தை குறைத்துவிடும். இந்த முருங்கை கீரை பல வகையான மருத்துவ குணம் கொண்டது. முருங்கை மரம் சம்மந்தப்பட்ட அனைத்துமே மருத்துவ குணமானது தான். இதே போல் நீங்கள் இந்த உப்பை வருக்கும் போது முருங்கை கீரை போட்டு அந்த கீரை கருகும் வரை வறுக்க வேண்டும். கல் உப்பை பற்றி சொல்கிறேன். இப்படி நீங்கள் வறுத்தால் அந்த உப்பில் உள்ள சத்துக்களோடு இந்த முருங்கை கீரையின் இரும்பு சத்து சேர்ந்து அந்த கல் உப்பு ஒரு மருந்தாக மாறி விடும். அப்போ பாருங்க அந்த உப்பை நீங்கள் மருந்தாக பயன்படுத்தலாம். இதே போல் முருங்கை கீரை நெய்யில் போட்டு வறுக்கும் போது அந்த நெய் மருந்தாக மாறி விடுகிறது. இப்படி தான் நெய்யை சாப்பிடவேண்டும். இது போல் தான் தயிரை மோராக கடைந்து தான் சாப்பிட வேண்டும். நம்ம முன்னோர்கள், சித்தர்கள், நியானிகள் இப்படி தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை படிப்பதில்லை. யாரேனும் சொன்னால் அதை கண்டுகொள்வதில்லை. சித்தர்கள் எல்லாவற்றையும் மறைக்கவில்லை தெளிவாக சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நம்ம படிகளை. கண்டதை எல்லாம் தேடி தேடி படிக்கிறோம். பார்க்கிறோம். இதை எல்லாம் தேடி படியுங்கள் தெரியும். ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க. நீங்கள் உங்கள் ஆழ்மனதில் எதை விரும்பி படிக்கிறீர்களோ அது எவ்ளோபெரிய பாடமாக இருந்தாலும் சுலபமாக புரியும். நீங்கள் விருப்பம் இல்லாமல் ஒரு விஷத்தை படித்தால் அது உங்களுக்கு புரியாது. இதுதான் காரணம். இந்த சித்தர்கள் நிறைய பாடல்கள் கூட படிச்சு பாருங்கள். அதுல எல்லவிளக்கமும் தெளிவாக இருக்கும். இதை எல்லாம் படியுங்கள் தெரிந்துவைத்து கொள்ளுங்கள். 


1. தயிரை மோராக்கி சாப்பிடுங்கள்

 2. தயிரை வெண்ணை அதில் முருங்கை கீரை போட்டு வணக்கி நெய் ஆக்கி சாப்பிடுங்கள்.

3. தண்ணீரை சூடு செய்து குடியுங்கள். ஆற வைத்து கூட குடிக்கலாம். 

4. கல் உப்பை சாப்பிடுங்கள்.அந்த கல் உப்பில் முருங்கை கீரை போட்டுஅந்த கீரை கருகும் வரை அதனை வணக்கி சாப்பிடுங்கள்.
















உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...