TOMB MAKING NOTES:
இந்த படத்தோட முதல் பகுதில ஒரு காட்டுக்குள்ள 2 பேர் இரவு நேரத்தில் பயந்து பயந்து செல்கின்றனர். அதில் ஒருவன் எனக்கு ஏதோ இதுலாம் சரி இல்லனு படுது வா இப்பமே போய்டலாம் வா டா வா டா னு சொல்றான். அதுக்கு இன்னொருத்தன் பயப்படாத நான் உன்கூடவே தான இருக்கன். பாரு டா நாம போட்ட திட்டம் மட்டும் செல்படுத்தினால் இந்த ஊரிலேயே நாம் தான் பணக்காரன் அப்படினு சொல்றான். நான் சொல்றத நல்ல கேளு டா. இந்த கொள்ளைக்கார கூட்டத்தை சேர்ந்த யாங் தெரியுமா உனக்கு? அவன் அடிக்கடி இங்க தான் வந்துட்டு போய்ட்டு இருக்காண்டா. அப்படி அவன் இந்த இடத்துக்கு வந்துட்டு போகுறப்பம் அவன் கைல நிறைய தங்க கட்டிகள் இருக்குறத நான் பார்த்தண்டா. அதனால நான் சொல்றத நல்லா கேளுடா. இந்த புராண கதைகள சொல்லப்படுகிற சூனிய காரி கல்லறை இங்க தான் இருக்கனும். அந்த கல்லறைக்குல எண்ணிலடங்கா தங்க கட்டிகள், பல வித விதமான ஆபரண நகைகள் இருக்கும்.
அதை எடுக்க தாண்டா உன்ன இங்க கூட்டிவந்துருகன் சொல்லிட்டு அந்த சூனியக்காரி இருக்கின்ற கல்லறை கிட்ட 2 பேரும் வாராங்க. அப்படி வந்தவங்க அந்த கல்லறையை திறந்து பார்த்தால் அந்த சூனியக்காரியோட பூத உடல் அங்க தான் இருக்குது. அதுபோல அவங்க நினச்சமாரியே அந்த கல்லறைக்குல நிறைய தங்கமும், வைரங்களும், வெள்ளியும் இருக்குது. கூட அப்பாவி மாறி ஒரு பையன் வந்தான்ல. ரொம்ப பயந்தவன் மாறியே நடிச்சான் பாத்திங்களா அவன் கத்திய எடுத்து கூட வந்தவன் வயித்துல சொருகிட்டு இனிமே இந்த மொத்த தங்கமும் எனக்குதான், அப்படினு அந்த சூனியக்காரிய அப்படியே பயந்து பாத்துட்டே இருக்கான். அந்த சூனிய காரி திடிர்னு மறைஞ்சு போய்டுறா. அந்த சூனியகாரி எங்கன்னு சுத்தி தேடுறான். அப்பம் தான் அந்த சூனியக்காரி நரியா மாறி அவன் கழுத்தை கடிச்சு ரத்தத்தை ஊறியுறா. அப்பம் அந்த இடத்துக்கு இந்த படத்தோட கதாநாயகன் வருகிறான். வந்துட்டு இந்த சூனியக்காரிய அடிக்குறான் நம்ம கதாநாயகனுக்கு, சூனியக்காரிக்கும் இடையில ஒரு சண்டை நடக்குது.
அந்த சண்டை இதில ஒரு சிகப்பு நிற துணிய அந்த சூனியக்காரி மேல சுத்தி அந்த கல்லறைக்குலயே அந்த சூனியக்காரிய வச்சுட்டான். அத பாத்துட்டு இருந்த கொள்ளைகாரங்களுக்குள்ள ஒருத்தன் அவங்களுக்குள்ள இந்த கதநாகனோட வீர தீரங்களை பத்தி சொல்லிட்டு இருக்கான். அது யாரு அவங்கள பாக்கலாமா நிறையபேர் ஆசைப்படறாங்க. ஹ்ம்ம் நீங்க பாக்கணுமா அங்க பாருங்க அவர் தான் அந்த கதாநாயகன் கைய காட்ட, அந்த நேரம் கதாநாயகன் நடந்து வந்துட்டு இருப்பான். அப்பம் அந்த கதாநாயகன் நிலை தடுமாறி கிழ விழ அப்பம் ஒரு பொண்ணு அவனை தாங்கிப்பிடிக்குறா. அது யாரு பாத்தா அது தான் கதாநாயகி. அவள் கண்கள் இரண்டும் பச்சை நிறத்தில் உள்ளது. கதாநாயகண் அந்த இடத்தை விட்டு போறான். அவன் போனபிறகும், அவனை பத்தி அந்த கூட்டத்துல உள்ளவன் சொல்லிட்டே இருக்குறான். அந்த கூட்டத்துல உள்ளவன் என் தோழனுக்கு பேய்களோட கண்கள் இருக்கு. பேய்களை துரத்தி அடிக்குற சக்தி இருக்குனு, எப்பேர் பட்ட கல்லறைகளையும் திறக்க கூடிய தைரியமும், திறமையும் இருக்கு.
அதனால என் தோழன் உதவி தேவைப்பட்டால் தாராளமா அதற்கான பணத்தை கொடுத்து அந்த உதவியை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்றான். அவன் பேசிட்டு இருந்தத கேட்டுட்டு இருந்த ஒருத்தன் எங்க கிட்ட ஒரு கல்லறை சமாதி பெட்டி இருக்கு. அத அவர் திறந்து கொடுத்தா போதும். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானலும் பணம் கொடுக்கிறேன் என்று சொல்றான். அவளவு தான நான் தோழனை கூட்டி வந்து திறக்கிறேன் என்று சொல்லிவிட்டு நம்ம கதாநாயகன் கிட்ட போய் இதை சொல்வான். இவ்வளவு அதிகமான பணம் கொடுக்கிறேன் சொல்றாங்க ஏதாவது சிக்கல் வந்துவிடாதா என்று கேட்குறான் அதலாம் ஒன்னும் வராது அப்படினு சமாதி பேட்டி இருக்குற இடத்துக்கு போறாங்க. அந்த சமாதி பெட்டில ஒரு ஒன்பது கட்டம் போட்ட ஒரு புலி சிலை சின்னதா இருக்கு. கதாநாயகன் அத பாத்துட்டு இதுல ஏதோ தப்பு இருக்கு வா போய்டலாம் நண்பனை கூப்டுறான்.
அந்த கொள்ள கார கும்பல் கதாநாயகன் தோழன் கழுத்துல கத்திய வச்சு ஓழுங்கா இதை திறந்து கொடுக்கல உன் நண்பனோட தலை தனியா கழண்டு ஓடும் சொல்ராங்க. கதாநாயகன் வேற வழி இல்லாமல் அந்த பெட்டியை திறக்க போறான். போறதுக்கு முன்னாடி கதாநாயகன் அவன்கிட்ட ஒரு தங்க நிற குச்சி ஒன்னு வச்சுருப்பான் அத வச்சு இதுக்குள்ள என்ன தான் இருக்குனு தெரிஞ்சுக்கலாம் பாத்தா. அந்த குச்சி சுற்றிக்கொண்டே இருக்கிறது. அவனால அந்த குச்சி சுத்துறத புரிஞ்சுக்கவே முடியல..
நிச்சயமா இதுக்குள்ள ஒரு தீய சக்தி தான் இருக்கனும் அப்படினு கதாநாயகன் புரிஞ்சுக்கிட்டான். எவ்வளவு தான் இங்க சுத்தி இருக்குறவங்க கிட்ட சொன்னாலும் இவனுங்க புரிஞ்சுக்க போறதில்ல அப்படினு நனைக்கிறான். அந்த கதாநாயன் அவன் குரு கற்றுக்கொடுத்த வித்தையை பயன்படுத்தி இறுதியாக அந்த பெட்டியை திறந்துவிட்டான். அந்த சுத்தி இருந்த கொள்ளைக்கூட்ட காரங்க அதுக்குள்ள என்ன இருக்குனு எட்டிப்பார்த்தா, பல வருசத்துக்கு முன்னாடி செத்து போன ஒரு மனுஷனோட எலும்புக்கூடு இருக்குது. அப்பம் அந்த எல்லோரும் இதுக்காகவா இப்படி கஷ்ப்பட்டோம் அப்படினு நனைகிறதுக்குள்ள அந்த பெட்டிக்குள இருந்து ஒன்னு வந்து அங்க இருக்குறவங்கள சாகடிக்குது. அப்பம் அந்த கூட்டத்துல ஒருத்தன் துப்பாக்கியை எடுத்து அந்த தலை மாறி இருக்குற அவங்கள கொன்னுக்கிட்டு இருக்குறத சுடறான.
ஆனா அந்த தலைக்கு ஒன்னும் ஆகல. அப்பம் அந்த தலை மாறி இருக்குற மிருகம் அந்த துப்பாக்கியை சுடுறவன பாத்து வ வருது, அப்பம் கூட்டத்துல இருக்குற இன்னோருத்தன் அந்த மிருகத்தை புடிச்சு அமுக்குறான். அத அப்படி புடிச்சு சம்மதிப்பெட்டிக்குள வைக்குறான் அவன். அப்பம் அது பஸ்பமா போயிடுது. இதற்கு நடுவில் கதாநாயகனும், அவன் நண்பனும் ஓடிப்போயிரவங்க.
அவங்க ரெண்டு பெரும் அவங்க இருக்குற இடத்துக்கு போய் ஓய்வெடுக்குறாங்க. அப்புறமா கதாநாயகன் நண்பன் நம்மளும் கொள்ளைகாரங்களா மாறிடலாமா கேக்குறான். அப்படினா மாறுனா தான் நிறைய காசு கிடைக்கும். நம்ம குருவையும் காப்பாத்த முடியும் சொல்ரான். நம்ம கதாநாயகன் அதுக்கு ஒதுக்கவே மாட்டிக்கிறான். நீ சொன்னன்னு தான் நான் அந்த பெட்டியை திறக்க வந்தன். குரு சொன்ன கத்து கொடுத்த கலைய நான் தப்பான விஷயத்துக்கு பயன்படுத்த மாட்டேன்னு சொல்ரான். அப்புறம் தன்னோட குருவை பார்க்க போறான். அப்பம் வந்து பார்த்தா அவன் குரு புத்தி பேதலிச்ச மாறி நடக்குறாரு. அத சரி பண்ண தான் அந்த கதாநாயகனும், அவன் நண்பனும் இப்படிலாம் பன்றாங்க. கதாநாயகன் தோழன் ஒரு பைப் மாறி ஒண்ண வாயில வச்சிருக்கான். அத பாத்த நம்ம கதாநாயகன் என்னடா இதுனு கேக்குறான். நம்ம அங்க போனோம்ல அந்த பெட்டில இது இருந்தது. கிடைச்சவர லாபம்னு இதை ஆட்டைய போட்டுட்டேன் சொல்றான். இத வச்சு என்னடா பண்ணலாம் அப்டினு கதாநாயகன் கிட்ட கொடுக்குறான். அத நம்ம கதாநாயகன் வாங்கி கைய வச்சு அத தடவி பாக்குறான். இது அந்த காலத்த சேர்ந்த ராஜாக்கு சொந்தமானதுனு சொல்றான். அப்பம் அவன் நண்பன் எதாச்சியா புடிச்சு இழுப்பான். அப்பம் அதுக்குள்ள ஒரு பேப்பர் இருக்கும். அந்த பேப்பர விரிச்சு பாப்பாங்க அதுல அந்த காலத்த சேர்ந்த ராஜா சமாதி பேட்டி எங்க இருக்குனு அந்த வரைபடத்துல போட்ருக்கும்.
அப்பம் அத பாத்துட்டு இருக்கும் போது நம்ம கதாநாயகி அந்த இடத்துக்கு வாரா. வந்துட்டு அந்த வரைபடத்தை எடுத்துட்டு தப்பிச்சு ஓட பாக்குறா. என்னடி எப்படி தப்பிச்சு ஓடுவ நாங்க 2 பேரு சொல்றான் அப்பம் அவன அடி அடின்னு அடிக்குறா. அத பாத்த நம்ம கதாநாயகன் அவலை எப்டியாது அடிச்சுட்டு அந்த வரைபடத்தை வாங்க முயற்சி பன்றான். அவனுக்கும் அடி விழுகுது. அப்புறம் அந்த வரைபடத்தை எடுத்து தப்பிச்சு பொறப்பம், வெளிய வந்தா அங்க அந்த கொள்ளைக்கார கூட்டம் நிக்குது. அத பாத்து இவளுக்கு ஒரு துளிகூட பயமில்லை. அவங்க அந்த வரைபடத்தை எங்க கிட்ட கொடுத்துட்டு நீ போய்டுனு சொல்றாங்க. அப்புறம் அவங்க கூட சண்டை போட்றா. எல்லாரையும் அடிச்சு பந்தாடுறா. கடைசில வில்லன் துப்பாக்கி முனைல அவ முன்னால நிக்கிறான்.
உடனே அவ சக்தியை பயன்படுத்தி அந்த வரைபடத்தை எரிச்சுடுறா. உங்களால என்ன கொள்ளமுடியாது. ஏன் அப்டினு வில்லன் கேக்குறான். அந்த பழங்கால சமாதி பெட்டி எங்க இருக்குனு எனக்கு மட்டும் தான் தெரியும். அந்த வரைபடத்தை படிச்சது நான் மட்டும் தான் சொல்றா. உடனே அந்த வில்லன் தலைவன் அவள தூக்கி வண்டிக்குள போடு. அங்க இருக்குற நம்ம கதாநாயகன் அவன் நண்பன் 2 பேரையும் உள்ள போட சொல்றான். சமாதி பெட்டிய தேடி போயிடு இருகாங்க. அங்க ஒரு உயரமான மலைக்கு மேல போய்ட்டாங்க. அப்புறம் எப்படி போகனு தெர்ல. அந்த கதாநாயகி நாம வரைபடத்துல பாத்த இடத்துக்கு பக்கம் வந்தாச்சுனு சொல்றா. உடனே அந்த வில்லன் நம்ம கதாநாயகனையும், அவன் நண்பனையும் அந்த பெட்டியை தேட சொல்றான்.
அவன் அதலாம் என்னால கண்டுபுடிக்க முடியாதுனு சொல்றான். உடனே அந்த கொள்ள கார கும்பல சேர்ந்தவங்க கால் கிட்ட சுடுறாங்க. என்ன இப்பம் தேடுறீங்களா இல்ல 2 பெரும் சாவுரிங்களா கேக்குறான் அந்த வில்லன். நம்ம கதாநாயகன் அவன் சக்திய பயன்படுத்தி அந்த கல்லறைக்கு எப்படி போகலாம் அப்படினு கண்டுபிடிக்குறான். கல்லறை நாம இருக்குற இடத்துக்கு கீழ இருக்குனு சொல்வான். உடனே எல்லாரும் கீழ போவாங்க. கல்லறையை ஒருவழியா கண்டுபுடிச்சுருவாங்க. அந்த கல்லறைல மிக பெரிய கதவு ஒன்னு இருக்கும். அத எப்படி திறக்கணு தெரியாம முழிப்பாங்க.
